Tuesday 3 March 2015

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அமுல்படுத்த மோடி அரசாங்கம் துடிப்பது ஏன்?










Great eastern energy corporation ltd (GEECL) இந்த கம்பெனி குஜராத்தைச் சேர்ந்த யோகேந்திர குமார் மோடி என்பவருடையதாகும். இந்த மீத்தேன் எடுக்கும் திட்டத்தின் செயல் தலைவர் பிரசாந்த மோடி இந்த மோடிகள் தான் பிரதமர் மோடியின் ஆசிர்வாதத்துடன் தமிழகத்தில் திருவாரூர் பகுதியில் சுமார் சுமார் 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள நிலங்களை நாசப்படுத்தி மீத்தேன் எடுக்கும் திட்டத்தை நடத்திட முனைப்புடன் செயலாற்ற வருகிறார்கள்.


மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, " நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு மீத்தேன் செயல்திட்டத்தைச் செயல்படுத்துவோம்" என நாடாளுமன்றத்தில் வாக்குறுதி கொடுத்துள்ளார். யாருக்கு? மோடிகளுக்குத் தான்!
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அமுல்படுத்தியே தீருவோம் என நாடாளுமன்றத்தில் மோடி கொக்கறிக்கிறார் யாருக்காக? ஏழை விவசாயிகளின் நலனுக்காகவா? இல்லை யோகேந்திர குமார் மோடி போன்ற கார்ப்பரேட்களுக்காகத்தானே தவிர ஒரு போதும் ஏழை மக்களுக்காக இல்லை. அணு திட்டங்கள், நியுட்ரினோ ஆய்வகம், மீத்தேன், இன்னும் அம்பானிகள், அதானிகள், டாடா பிர்லாக்களுக்காக ஏழைகளின், மத்தியத் தர விவசாயிகளின் நிலங்களை எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஆள்தூக்கி கருப்புச் சட்டங்களை போராட்டவாதிகளின் மீது பாய்ச்சுவது போல மக்களிடமிருந்த நிலங்களை பிடுங்குவதற்காகத்தான் இந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற பிஜேபி அரசாங்கம் தவியாய் தவிக்கிறது. இதனால் விவசாய நாடான இந்தியா பெரும் பாதிப்பை அடையும். சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படும். ஆலைகளால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி மக்களிடமிருந்து நிலங்களை பிடுங்கி பன்னாட்டு நிறுவனங்களிடமும் உள்நாட்டு பெருநிறுவனங்களுக்கும் அரசு கொடுத்துவிடும் இதனால் சிறு உற்பத்தி நிறுவனங்கள் அழிந்து போகும். 

 பாஜக வின் இரட்டை முகங்களை தமிழக மக்கள், இந்திய மக்கள் புரிந்து மீத்தேன் எடுக்க வரும் கொள்ளையர்களை விரட்ட ஒன்று சேர்ந்திட வேண்டும். அது போல் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து மிகப்பெரும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் வரை எதுவும் ஆகப்போவதில்லை இங்கு என்பது தான் உண்மை. மக்கள் போராட்டத்தை அரசிற்கெதிராக நடத்தாவிடில் நாடு பலவீனமான சூழலை அடையும்.