Monday 29 June 2015

பசுக்களை பாதுகாக்கிறதா பாஜக?



பாஜக அரசு ஒரு போதும் பசுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததில்லை அது பசு பாதுகாப்பு என்ற பெயரில் மதவாதக் கருத்துக்களை பேசி தலித்களையும், முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும் இன்னும் மாட்டுக்கறியை உண்ணும் உழைக்கும் மக்களையும் தனிமைப்படுத்தவும், நாட்டில் மதமோதல்களை உருவாக்கி அதில் அரசியல் ஆதாயம் தேடவும் தான் பாஜக அரசு மாட்டிறைச்சிக்கு தடை, மாடு விற்பதற்கு தடை, பிற இடங்களுக்கு கொண்டு செல்ல தடை போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தி சமூக அமைதியை கெடுத்து வருகிறது. ஆனால் ஆளும் பாஜக அரசு முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட தற்போது மாட்டிறைச்சி ஏற்றுமதியை 19% அதிகரித்துள்ளது.
அதாவது பாஜக அரசில் கடந்த பிப்ரவரி வரையிலான ஏற்றுமதி 15,91,581 மெட்ரிக் டன் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இதே கால அளவில் 10,56,118 மெட்ரிக் டன் மாட்டுக்கறியே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது பாஜக ஆட்சி வந்தவுடன் மாட்டுக்கறி ஏற்றுமதி அந்த குறிப்பிட்ட கால அளவில் 5,35,460 மெட்ரிக் டன் அளவிற்குஅதிகமாக  ஏற்றுமதி செய்துள்ளது. இப்போது புரிகிறதா பசுக்களை பாஜக அரசு பாதுகாக்கவில்லை என்று .
 அதே போல்   பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை போட முயற்சித்து வருகிறது. மகாராஸ்டிராவில் தடை போட்டது ஆனால் நீதிமன்றம் அந்த தடையை ஒத்திவைத்துள்ளது. 
தடைபோடுவதன் அவசியம் என்ன? 
பாஜக மாட்டிறைச்சிக்கு தடை கொண்டுவரக் காரணம் பசுப் பாதுகாப்பு என்பதெல்லாம் வெரும் அரசியலுக்காகத்தான் ஆனால் அது நாட்டில் மத ஒற்றுமையை அகற்றிடவும், தலித்களையும், இஸ்லாமிய, கிறித்துவ மக்களையும் இன்னபிற உழைக்கும் மக்களையும் பிரித்தாளவே இந்த சூழ்ச்சிகளை செய்து வருகிறது. 

மேலும் மாட்டிறைச்சிக்கு தடை போடுவதன் மூலம் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் பசுக்களும், காளைகளும் கிடைக்கும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
உண்மையில் பாஜக அரசிற்கு பசுக்களை, மாடுகளை பாதுகாக்கும் எண்ணம் இருந்திருந்தால் மோடி பிரதமர் ஆனதும் முதல் கையெழுத்தே வெளிநாட்டிற்கு மாட்டுக் கறி ஏற்றுமதி செய்வதை தடைசெய்வதற்காகத்தான் இருந்திருக்கும் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. ஆர்எஸ்எஸ், சங்பரிவாரங்களும் அவ்வாறு கோரிக்கைகளை எழுப்பவில்லை என்பது மிக முக்கியமானதாகும். 
பாஜக அரசில் 19% மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்பதற்கான தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் சண்டே ஸ்டாண்டார்டு தளத்தில் வந்த ஆதாரம்:


s per the statistics the Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA)—the government’s gatekeeper for exports—the production and export of red meat have registered a steady jump during the BJP Government. The figures being collated by the APEDA, under the Commerce Ministry headed by Nirmala Sitharaman, says that the country has exported red meat to the tune of 15,91,581 MT (metric tonnes) till February. The figure for the same period last year was around 10,56,118 MT, which is lesser by 5,35,460 MT. In terms of revenue, there is a 19 per cent increase compared to the previous fiscal year.(By Cithara Paul, Published: 08th Mar 2015 06:00:00 AM The Sunday Standard)
2013 ம் ஆண்டில் உலக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2 வது இடத்தை பிடித்துள்ளது. ஆதாரம் கீழே..

World9,165,000
RankCountry2013% Of World
1Brazil1,849,00020.17%
2India1,765,00019.26%
3Australia1,593,00017.38%
4United States1,172,00012.79%
5New Zealand529,0005.77%
6Uruguay338,0003.69%
7Canada333,0003.63%
8Paraguay326,0003.56%
9EU244,0002.66%
10Belarus220,0002.40%
11Argentina186,0002.03%
12Mexico166,0001.81%
13Nicaragua125,0001.36%
14Pakistan50,0000.55%
15Colombia46,0000.50%
16Jordan35,0000.38%
17Saudi Arabia35,0000.38%
18Ukraine34,0000.37%
19China30,0000.33%
20Costa Rica18,0000.20%
21Honduras13,0000.14%
22South Africa13,0000.14%
23Russia12,0000.13%
24Malaysia6,0000.07%
25Chile5,0000.05%
26Guatemala4,0000.04%
27Korea, South4,0000.04%
28Lebanon4,0000.04%
29Switzerland3,0000.03%
30Azerbaijan2,0000.02%
31Bosnia 1,0000.01%
32Japan1,0000.01%
33Kazakhstan1,0000.01%
34Philippines1,0000.01%
35Taiwan1,0000.01%
36Senegal00.00%
Source:  FAS/USDA (metric tons)
World Beef & Cattle Rankings