Wednesday 24 April 2013

தீவரவாதிகள் தேவைப்படுகிறார்கள்... பா.ஜ.க. ஜெயிக்க...


    தேர்தல் வந்தால் பலருக்கு கொண்டாட்டம் இந்தியாவில்!  ஆனால் முஸ்லிம் இளைஞர்களுக்கு மட்டும் ஏனோ திண்டாட்டம் தான். இந்த வலியை சிறை சென்று வந்த அப்பாவி முஸ்லிம்களை கேட்டுப்பாருங்கள் புரியும். இந்தியாவில் எப்போதெல்லாம், எங்கெல்லாம் தேர்தலை பி.ஜே.பீ. சந்திக்கிறதோ அங்கெல்லாம் குண்டு வெடிப்பது வாடிக்கையாகிவிட்டது. அதனையொட்டி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என முஸ்லிம் இளைஞர்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் விசாரணை கைதிகளாகவே பல ஆண்டுகள் சிறையில் அடைப்பட்டு கிடந்து பின் சிலர் விடுதலை செய்யப்படுவர் குற்றமற்றவர்களாக.. இன்னும் சிலர் சிறையிலேயே அவர்கள் வாழ்க்கை தொடரும்.. வழக்கு மட்டும் முடியாது. முடிக்கமாட்டார்கள்.

ஏன் இந்த நிலை?
            பா.ஜ.க.வின் அரசியல் தந்திரங்களில் இதுவும் ஒன்று. உதாரணம் நிறைய உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் நெல்லையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவெடித்தது. உடனே இங்குள்ள தமிழ், ஆங்கில நாழிதழ்கள் பக்கம் பக்கமாக அல் உம்மா இயக்கம் தான் இதை செய்தது. அவர் செய்திருப்பார். இவர் செய்திருப்பார் என ஏகப்பட்ட கதைகளை அளவில்லாமல் விட்டனர். கடைசியில் ஒரு நேர்மையான காவல் அதிகாரி அந்த குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்களை கைது செய்தார். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் அல்ல! மாறாக இந்துக்கள் அதுவும் பா.ஜ.க வை சேர்ந்த இந்து பாசீசவாதிகள்.காவல்துறை அதிகாரி தனது பேட்டியில் அவர்களின் தெளிவான சதியினை அம்பலப்படுத்தினார்.அதாவது மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்காகவும் முஸ்லிம்கள் மீது பழியை போடுவதற்காகவும் தங்கள் அலுவலகத்தின் மீதே குண்டு வீசியதாக தெரிவித்ததாக அந்த காவல் அதிகாரி தெரியப்படுத்தினார். இது பா.ஜ.கவின் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.ஸின் சதிகளில் ஒன்று. இது ஒன்றும் புதிதல்ல காந்தியை கொன்ற கோட்சே கூட  தனது முஸ்லிம்கள் செய்வது போல கத்னா( ஆண்குறியின் முன் தோலை நீக்குதல்) செய்து கொண்டு தனது கையீல் இஸ்மாயில் என்று பச்சை குத்தி கொண்டு (அந்த முட்டாளிற்கு தெரியவில்லை முஸ்லிம்கள் பச்சை குத்திகொள்ள மாட்டார்கள் என்று) தான் காந்தியை கொலை செய்தான் பின்பு இந்துத்துவ பாசிசவாதிகள் முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிரச்சாரம் செய்தனர். ஆயிரக்கணக்கில் முஸ்லிம்க்ள் கொலை செய்யப்பட்டனரர். அதற்காகத்தானே கோட்ஸே அப்படி முஸ்லிம் வேடம் போட்டான்.

        தற்போதுள்ள நவீன பாசிசவாதிகள் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் போது முஸ்லிம்கள் மீது பழியை போடுவதற்காக போலியான தாடிகளையும், தொப்பிகளையும் பயன்படுத்துகின்றனர்.உதாரணமாக மாலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை இந்துத்துவ பாசிச பயங்கரவாதிகள் இந்த முறையில் தான் நிகழ்த்தினார்கள். அங்கும் பைக் தான் பயன்படுத்தப்பட்டது அந்த பைக் பெண்சாமியார் போர்வையில் வாழ்ந்த பயங்கரவாதி பிரக்யாசிங் தாகூர் என்பவருடையது என்பது பின்னர் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. நேர்மையான காவல்துறை தலைவர் ஹேமந்த் கர்கரே என்பவரால் இந்துத்துவ பயங்கரவாதம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னரே அவர்களின் சதி பலரால் பேசப்பட்டது. சமீபத்தில் கூட இந்திய உள்துறை அமைச்சரும், உள்துறை செயலாளரும் காவி பயங்கரவாதம் பற்றி தெளிவாகவே குறிப்பிட்டனர். ஆம் இன்று இந்தியாவையே பிடித்து கொண்டு ஆடுவது இந்த காவி பயங்கரவாதம் தான்.

       கர்நாடகாவில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் கடைசி நாளன்று பெங்களுரில் பீ.ஜே.பி. அலுவலகத்திற்கு அருகில் நடந்த குண்டு வெடிப்பும் கூட நடுநிலையாளர்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. காரணம் தேர்தல்!

     கர்நாடக மாநிலத்தில் தேவகவுடாவின் தவறினால் ஆட்சியை பிடித்த பி.ஜே.பி. அதை தக்க வைக்க முயற்சிக்கிறது. ஆனால் பி.ஜே.பி.குள்ளேயே நிறைய பிரச்சினை ஒரு பக்கம் எடியுரப்பா இன்னோரு பக்கம் ஆபாச செயல்களால் மாட்டிக்கொண்ட அமைச்சர்கள் என பி.ஜே.பீயின் நேர்மை என்ற  முகமூடி கிழிந்து தொங்குகிறது. இதனை சரிகட்டவும் மக்களை தன்பக்கம் ஈர்க்கவும் ஒரு நிகழ்வு தேவைப்படும் பட்சத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பை ஏன் அவர்களே நிகழ்த்தியிருக்கக் கூடாது? ஏன் அந்த கோணத்தில் காவல் புலனாய்வு துறைகள் விசாரணையை துவக்கக் கூடாது? செய்யமாட்டார்கள். காரணம் உளவுதுறையும் காவிமயமாகி வருகிறது என்பது இதற்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புகளும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதும், பல வழக்குகள் போலியாக உருவாக்கப்படுவதுமே இதற்கு சாட்சிகள்.

தமிகத்தின் பக்கம் பார்வையை திருப்பும் புலனாய்வு அமைப்புகள்:
       சமீப காலமாக தமிழகத்தில் இந்துத்துவ அமைப்புகள் ஒரு பதட்டமான சூழலை தமிழகத்தில் உருவாக்கி வருகின்றன. அதை அறிந்தும் அறியாதது போல உளவு அமைப்புகள் அரசை எச்சரிக்காது இருக்கின்றன. மேடை போட்டு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும், முஹம்மது நபி அவர்களையும் பற்றி மிக கொச்சையாக பேசி வருகின்றனர். முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் இழிவுபடுத்தி போஸ்டர் ஒட்டுகின்றனர். சில ஆண்டுகளாக பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளன்று இனிப்புகளை பொது இடங்களில் வழங்கி சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் விதமாக நடந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் மீதோ அல்லது அவர்கள் சார்ந்த அமைப்புகள் மீதோ எந்த விசாரணையும் இல்லை வழக்குகளும் இல்லை. இந்த பாரபட்சமான போக்கால் அவர்கள் தைரியம் பெறுகிறார்கள். மேலும் மேலும் வன்முறையை தூண்டும் விதமாகவே பல இடங்களில் பேசியும் செயல்பட்டும் வருகின்றனர். எடுத்துக்காட்டாக சமீபத்தில் நடந்த நீலகிரி மாவட்ட பிரச்சினை. முஸ்லிம்களை குறிவைத்து இந்து முண்னனி பொருப்பாளர் பேசிய பேச்சை தடுக்க சொல்லி காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததன் பின்விளைவே அதை தொடர்நத சம்பவங்களுக்கு காரணம். உதகையில் நடந்த சிறு பிரச்சினையை வைத்துக் கொண்டு இன்னொரு கும்பல் குன்னூரில் போஸ்டர் ஒட்டி பிரச்சினையை வளர்த்தது. இதை தடுக்காதது ஏன்? இதற்கு யார் பொருப்பு உளவு துறை தானே. சிறு சிறு பிரச்சினைகளுக்காக மூன்று மாவட்டங்களில் பந்த் நடத்தப்பட்டது. பலவேறு இடங்களில் அரசு பேரூந்துகள் மீது கல் வீசி கண்ணாடிகளை உடைத்தும், கடைகளை அடித்தும் வன்முறை வெறியாட்டத்தை இந்து அமைப்புகள் நடத்தியது இதற்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது. எதுவுமில்லை. கோவையில் அனைத்து அமைப்புகளையும் அழைத்து அமைதி கூட்டத்தை வழக்கம் போல் நடத்தியது. ஆனால் இந்து அமைப்புகளுக்கு ஒரு நியாயம் முஸ்லிம் அமைப்புகளுக்கு ஒரு நியாயம் என்ற போக்கே கடைப்பிடிக்கப்படுகிறது ஒரு சில அதிகாரிகளால்.. இது தான் பிரச்சினை ஒரு சிலரால் தான் அரசிற்கே கெட்ட பெயர் வருகிறது என்பதை அரசு உணர்ந்து காவிகாக்கிகளை களையவேண்டும். அப்போது தான் அமைதி நிலவும். 
  தமிழகத்தில் சமீபத்திய மதமோதல்களை இந்து அமைப்புகள் உருவாக்குவதற்கு காரணம் தமிழகத்தில் பி.ஜே.பி.யை வளர்த்தெடுக்க அது உதவும் என்பதால் தான். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிகுறிகளாகவே இதை அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.பீ.ஜே.பி. ஜெயிக்க தீவிரவாதிகள் பலர் தேவைப்படுவார்கள். முஸ்லிம் இளைஞர்களே எச்சரிக்கையாயிருங்கள்.  எனவே பி.ஜே.பீயின் இந்த ஓட்டுப்பொறுக்கும் மலிவான வழிமுறைக்கு இடம் கொடுக்காமல் அதை முறியடிக்க வேண்டும். அப்போது தான் தமிழகம் மட்டுமல்ல  இந்தியாவே அமைதி பெறும்.

 கோவை சிறைவாசிகள் குடும்பத்தினர் அப்துல் ரஹ்மான், எம்.பி யிடம் மனு கொடுக்கும் நிகழ்வில் அவர்களின் பிரச்சினையை எடுத்துகூறும் கிச்சான் புகாரி

     தற்போது தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை புலனாய்வு அமைப்புகள் பெங்களுர் குண்டு வெடிப்பை தொடர்புபடுத்தி கைது செய்துள்ளது. இதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை காரணம் கிச்சான்  புகாரி என்பவர் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு விடுதலையாகி தற்போது மனைவி மக்களோடு அமைதியாக வாழ்வதோடு சிறையில் உள்ளவர்கள் வெளிவருவதற்காக வழக்குகளை நடத்திவரும் charitable trust for minoriiies என்ற அறக்கட்டளையுடன் இணைந்து அவர்களுக்காக உதவி வருகிறார். அவரின் நீலைப்பாடு இப்படி இருக்க புலனாய்வு துறை ஏதோ காரணமாக அவரையும் சிலரையும் கைது செய்துள்ளது. இது வழக்கம் போல் திசை திருப்பும் முயற்சியே அன்றி உண்மைக் குற்றவாளிகளை ஒருபோதும் கைது செய்யமாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மீண்டும் ஒரு ஹேமந்த கர்கரே வரமாட்டாரா? என்பது முஸ்லிம் இளைஞர்கள் மட்டுமில்லாமல் மனித உரிமை ஆர்வலர்கள் நடுநிலைமைவாதிகளின் ஏக்கமாகவே உள்ளது. 

Tuesday 9 April 2013

பா.ஜ.க.வின் அடுத்த பிரதமர்வேட்பாளர் யார்?



       பா.ஜ.க.வின் அடுத்த பிரதமர்வேட்பாளர் யார்? என்பது தான் இன்றைய இந்திய மீடியாக்களின் அலசல் அரங்கமாக இருந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற காவி கூடாரங்கள் 2002ன் வன்முறை நாயகனான நரேந்திர மோடியையே பிரதமர் வேட்பாளராக்க முயற்சித்து வருகிறது. மீடியாக்கள் மூலமும் பா.ஜ.க. தலைவர்கள் மூலமமாகவும்  அதற்கான பிரச்சாரத்தையும் தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் அத்வானி, சுஸ்மா போன்ற, பிரதாப் ரூடி, போன்ற பா.ஜ.க.வின் பல்வேறு தலைவர்கள் மோடியை விரும்பவில்லை. ஆனால் ராஜ்நாத்சிங் உட்பட பலரை மோடி கும்பல் விலைக்கு வாங்கியாயிற்று.
ஏன் மோடியை பிரதமர் வேட்பாளராக்க துடிக்கின்றனர்?
     பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் ஊழல் முகங்கள் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. இடைஇடையே ஆபாச கூத்தடிக்கும் அமைச்ர்கள், எம்.பிக்கள் ஒருபக்கம் என பா.ஜ.கவின் வளர்ச்சி சரிந்து கொண்டே செல்கிறது. எனவே தான் குஜராத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக காட்டி பிரச்சாரம் செய்து வருகிறது இந்துத்துவா சார்புடைய ஊடகங்கள்.
மோடியை யார் தான் விரும்புகிறார்கள்?
       இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற பாஜகவின் 33 வது ஆண்டு விழாவில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ,அத்வானி ஆகியோர் முன்னிலையில் பேசிய பாஜக துணைத் தலைவர் விஜய் கோயல் ''2014 ஆம் ஆண்டு அத்வானி தலைமையில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்'' என்று தெரிவித்தார்.  பாஜகவின் மூத்த தலைவரும் நடிகருமான சத்ருகன் சின்ஹாவும் அத்வானி தான் பிரதமர் வேட்பாளர் என்று கருத்து தெரிவித்து இருந்தார். 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக பொதுச் செயலாளர் பிரதாப் ரூடி ''பிரதமர் வேட்பாளர் தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களிடையே கருத்து வேற்றுமை இல்லை. பாஜகவின் பிரதமர் வேட்பாளரை பாஜக பாராளுமன்றக் குழு முடிவு செய்யும்'' என்று தெரிவித்துள்ளார்.
     ஆக பா.ஜ.கவிலுள்ள பல தலைவர்கள் மோடியை விரும்பவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. 
பா.ஜ.க.பற்றி சமீபத்தில் அத்வானி செய்திருந்த விமர்சனம் இங்கு கவனிக்கத்தக்கது. 
 பாஜ.க.வில் மிரட்டியே பல பதவிகளை பெற்று வருகிறார் மோடி. ஆனால் அதையெல்லாம் மீறிய மோடியின் மீடியா பிரச்சாரம் மூலம் பல மீடியாக்கள் நன்றாகவே சம்பாதிக்கிறது. மக்கள் மன்றத்திலும் ஒருவித மாய பிம்பங்கள் உருவாக்கப்படுகிறது. அதற்கு உதாரணம் இங்குள்ள சில பார்ப்பனர்களும் மோடி ஆதரவு பாஸிஸ்ட்டுகளும் தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை காட்டி குஜராத்தில் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ளதாக பேசிவருவது கவனிக்கதக்கது. ஆனால் குஜராத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் தண்ணீர் இணைப்போ, மின் இணைப்போ இல்லாமல் இருப்பது பற்றி இங்குள்ள மீடியாக்கள் கூட வாய் திறப்பதில்லை. சமீபத்தில் கூட அமெரிக்காவிலிருந்து "நாங்களும் தொழில் அதிபர்கள் தான்" என்ற அடைமொழியோடு காசு கொடுத்து தன்னைபற்றி புகழ்வதற்காக கூட்டி வந்த கூலிக்கு மாரடிக்கும் கதைகள் கூட இதே மீடியாக்களில்  வெளிவந்தது.
பொருத்திருந்து பார்போம் மோடிக்கு (சங்பரிவாரங்களுக்கு) பா.ஜ.க பணிகிறதா? இல்லையா என்று? 

குஜராத்தில் தண்ணீருக்காக பரிதவிக்கும் கிராம மக்கள்