Thursday 27 August 2015

இந்திய முஸ்லிம் பிறப்பு விகிதம் குறைந்தது ஏன்?



இந்தியாவில் முஸ்லிம் மக்கள்தொகை அதிகரித்து வருவதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சிவிகிதம் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் தற்போது குறைந்துள்ளது.

இந்து மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இந்திய முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.
அண்மைகாலமாக முஸ்லிம் சமூகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருக்கிறது. இதனால், இந்து மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.


2001, 2011 காலகட்டத்தில் இந்து மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 16.76% ஆகவும், முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 24.6% ஆகவும் உள்ளது. இது இதற்கு முந்தைய கணக்கெடுப்புடம் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருக்கிறது. முந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பில், இந்து மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 19.92% ஆகவும், முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 29.52% ஆகவும் இருந்திருக்கிறது.

குடும்பக் கட்டுப்பாட்டை அதிகமாக இந்த தலைமுறை முஸ்லிம்கள் கடைபிடிக்க ஆரம்பித்துள்ளனர். இரண்டு அல்லது ஒரு குழந்தை போதும் என்ற எண்ணத்தை இளையோர் வளர்த்து வருகின்றனர். இதற்கு கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்து விடுகிறது. நகரச் சூழலில் முஸ்லிம் பிறப்பு விகிதம் அதிகமாக குறைந்துள்ளது.

தற்போது  தம்பதியரிடையே இரு குழந்தைகள் அல்லது ஒரு குழந்தை போதும் என்ற மனநிலை அதிகமாகிவருகிறது. இதற்கு காரணம் ஆடம்பர வாழ்க்கையின் மீது ஏற்பட்டுள்ள மோகமும் ஒரு காரணமாக அமைகிறது. மேலும் கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து வருவதால் குழந்தைகளை வளர்ப்பதில் ஏற்படும் சிக்கல்களால் கூட தற்போதைய தம்பதிகளின் குழந்தை பிறப்பை கட்டுப்படுத்துகின்றனர்.


மேலும் அதிகரித்து வரும் கல்விக் கட்டணம், நகர வாழ்க்கையில் வாடகை, விலைவாசி போன்ற காரணங்களும் குழந்தை பிறப்பு சதவீதத்தை வெகுவாக குறைக்கும் முக்கிய காரணிகளாக அமைந்துவிடுகிறது.

ஆனால் இந்த கட்டுப்பாடுகளின் காரணமாக அடுத்த 20, 30 ஆண்டுகளில் முஸ்லிம் சமுதாயத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் அபாயம் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.