Wednesday 15 July 2015

எச்.ராஜா வீடு மீது பெட்ரோல் குண்டு - ஏமாற்று நாடகம்!

செய்தி: 
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சுப்பிரமணியபுரம் 10-வது வீதியில் பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவின் வீடு உள்ளது. இங்கு இவரது தம்பி பாஸ்கர், அவரது மனைவி ஜானகி ஆகியோர் வசிக்கின்றனர். இவரது வீட்டுக்கு நிரந்தர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீடு முன்பு இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். படியில் விழுந்த பெட்ரோல் குண்டுகள் உடைந்து தீப்பற்றியது. காவலுக்கு இருந்த போலீஸார் தீயை அணைத்தனர்.
மண்ணெண்ணெயைக் கலந்து யாரோ பாட்டிலில் அடைத்து தீ வைத்து வீசியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

எச. ராஜா


எச்.ராஜா வீடு மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர்களை கைது செய்யக் கோரி இந்து முன்னணி அமைப்பினர், பாஜகவினர் காரைக்குடி பெரியார் சிலை முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். நகரச் செயலாளர் அக்னி பாலா தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட 31 பேரை போலீஸார் கைது செய்தனர். - தமிழ் தி இந்து

மக்கள் சிந்தனைக்கு:1. பாட்டிலில் பெட்ரோலுடன் மண்ணெண்ணை கலந்து அது வீரியமானதாக இல்லாமல் செய்துள்ளனர்.( வெரும் புகை தான் வரும் எனதெரிந்து)
2. அந்த வீட்டில் ராஜாவின் தம்பி தான் வசித்துவருகிறார். (இது திட்டமிட்டு... மண்ணெண்ணை குண்டு வீசும் கும்பலுக்கு தெரிந்திருக்கும்)
3. கண்டன ஆர்பாட்டத்தில் இந்து முன்னணி, பாஜக சேர்த்து 31 பேர் தான் கலந்து கொண்டுள்ளனர்.( மக்கள் இப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை காரணம் அது போலியான உள்நோக்கம் கொண்ட தாக்குதல் என்பது தெரிந்திருக்கிறது.)
4. ராஜா தான் ஒரு தேசிய செயளாளராக இருந்தும் டம்மியாக இருப்பதாக கருதுவதால் Z பாதுகாப்புக்கு அடி போடவே இது போன்ற காரியங்களை அவரது ஆட்களை வைத்து செய்திருக்கலாம். ( காரணம் இதற்கு முன்னால் பல பாஜக காரர்கள் தமக்கு தாமே கையை கிழித்துக் கொண்டும், தமது வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிக்கொண்டும் பாதுகாப்பு வேண்டியதை தமிழக காவல்துறை கண்டுபிடித்து அது செய்திகளிலும் வந்ததை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
எனவே இது போன்ற போலியான மண்ணெண்ணை குண்டுகளை கைவிட்டு ராஜா மக்களுக்கு எதாவது நல்ல காரியங்களை செய்தால் மக்கள் பாராட்டுவார்கள். இது போன்ற காரியங்களை தொடர்ந்தால் காரி உமிழ்வார்கள்.

எச்.ராஜா வீடு