Thursday 22 October 2015

அரசு பள்ளிகளில் "கல்வி சுற்றுலா" என்ற பெயரில் "காவிச் சுற்றுலா" !


அரசு பள்ளிகளில் "கல்வி சுற்றுலா" என்ற பெயரில் "காவிச் சுற்றுலா" !

உத்தரபிரதேசத்தில் தலைவிரித்தாடும் காவி பயங்கரவாதம்..! எங்கே செல்கிறது இந்த நாடு?

உத்தரப்பிரதேசத்தில் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உஸ்கா பஜார் என்ற ஊரிலுள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் குல்சார் அஹமது. 

இவர் பள்ளி நிர்வாகம் கல்வி சுற்றுலா செல்ல அழைத்ததால் தன் தந்தையிடம் ரூ. 450 பெற்று பள்ளி தலைமையாசிரியரிடம் செலுத்தியுள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை கல்வி சுற்றுலா என்று பொய் சொல்லி ஏமாற்றி மாணவர்களை பத்னியில் பாஜக எம்.பியான ஜகதாம்பிகா பால் என்பவர் நடத்தும் சூர்ய மகாவித்யாலாயா என்ற பள்ளியில் அக்டோபர் 10முதல் 18 வரை நடந்த ஆர்எஸ்எஸ் ஷாகாவிற்கு அழைத்து சென்றுள்ளனர். முஸ்லிம் மாணவனான குல்சார் அஹமதுவின் பெயரை விஜயகுமார் என்று பதிவு செய்துள்ளனர்.

மாணவர்களின் செல்போன்களை பறித்து வைத்துக்கொண்டு கடைசி நாளில் தான் கொடுத்துள்ளனர். அவர்களது சீருடையையும் வாங்கி வைத்துக் கொண்டு ஆர்எஸ்எஸ் சீருடையை வழங்கியுள்ளனர் காவி பாஸிஸ்ட்கள். 

ஆர்எஸ்எஸ் முகாமில் முஸ்லிம்களுக்கு எதிராக பாடல்கள் பாடப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சுகளும் பேசப்பட்டுள்ளது. முஸ்லிம் சிறுவர்களை வைத்துக்கொண்டே.. இத்தனையும் நடந்துள்ளது. அவர்களுக்கு இந்துத்துவ ஷாகா பயிற்சியை கட்டாயமாக திணித்துள்ளனர்.

என்ன செய்கிறது உ.பி. அரசு? மாணவர் அஹமது தந்தை மக்பூப் அஹமது மாநில சிறுபான்மை நல ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார் பள்ளியின் இந்த நயவஞ்சகத் திட்டத்துக்கு எதிராக. அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? இதற்கு மேல் இந்த மாதிரியான செயல்களை மற்ற அரசு பள்ளிகள் மேற்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமா அரசு என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு. அரசு மெத்தனமாக இருந்தால் அனைத்து அரசுப் பள்ளிகளும் ஷாகா பயிற்சிக் களங்களாக மாறும் மாணவர்கள் பயங்கரவாதிகளாக மாற்றப்படுவர். தன் சக முஸ்லிம் மாணவனை கொல்லும் மாணவனாக மற்ற மாணவர்கள் வார்த்தெடுக்கப்டுவார்கள். இதை அரசு வேடிக்கை தான் பார்க்கும். அதற்கும் ஒரு காரணத்தை இந்துத்துவவாதிகள் வைத்திருப்பார்கள். 

உ.பி.யை அடுத்த சோதனைக்களமாக தேர்வு செய்து தன் திட்டங்களை செயல்படுத்திவருகிறது ஆர்எஸ்எஸ். இவர்களின் இந்த கேவலமான சதித்திட்டங்களுக்கு காவல்துறையும், அரசு அதிகாரிகளும் துணைபோகின்றனர். இத்தனைக்கும் அங்கு நடப்பது பிஜெபி ஆட்சியல்ல ஆனாலும் அங்கு பாசிச சக்திகள் ஆழமாக வேரூன்ற தொடங்கியிருப்பதையே இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகிறது. 

தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக பொய் சொல்லி இந்திய விமானப்படையில் பணியாற்றும் வீரரின் தந்தை அக்லாக் முஸ்லிம் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே அடித்துக் கொல்லப்பட்டார். அப்போது கூட காவல்துறை அவரின் வீட்டிலிருந்து கறியை எடுத்துச் சென்று சோதனை சாலைக்கு அனுப்பியது இது எதைக் காட்டுகிறது. பாசிசத்துக்கு காவல்துறை துணை போவதைத் தானே இது காட்டுகிறது. 

இந்துத்துவ பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும். அப்போது தான் இந்த நாடு அமைதி பெறும். சாதிய, மத வெறியர்கள் ஒடுக்கப்பட வேண்டும் அப்போது தான் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.