Tuesday 9 April 2013

பா.ஜ.க.வின் அடுத்த பிரதமர்வேட்பாளர் யார்?



       பா.ஜ.க.வின் அடுத்த பிரதமர்வேட்பாளர் யார்? என்பது தான் இன்றைய இந்திய மீடியாக்களின் அலசல் அரங்கமாக இருந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற காவி கூடாரங்கள் 2002ன் வன்முறை நாயகனான நரேந்திர மோடியையே பிரதமர் வேட்பாளராக்க முயற்சித்து வருகிறது. மீடியாக்கள் மூலமும் பா.ஜ.க. தலைவர்கள் மூலமமாகவும்  அதற்கான பிரச்சாரத்தையும் தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் அத்வானி, சுஸ்மா போன்ற, பிரதாப் ரூடி, போன்ற பா.ஜ.க.வின் பல்வேறு தலைவர்கள் மோடியை விரும்பவில்லை. ஆனால் ராஜ்நாத்சிங் உட்பட பலரை மோடி கும்பல் விலைக்கு வாங்கியாயிற்று.
ஏன் மோடியை பிரதமர் வேட்பாளராக்க துடிக்கின்றனர்?
     பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் ஊழல் முகங்கள் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. இடைஇடையே ஆபாச கூத்தடிக்கும் அமைச்ர்கள், எம்.பிக்கள் ஒருபக்கம் என பா.ஜ.கவின் வளர்ச்சி சரிந்து கொண்டே செல்கிறது. எனவே தான் குஜராத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக காட்டி பிரச்சாரம் செய்து வருகிறது இந்துத்துவா சார்புடைய ஊடகங்கள்.
மோடியை யார் தான் விரும்புகிறார்கள்?
       இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற பாஜகவின் 33 வது ஆண்டு விழாவில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ,அத்வானி ஆகியோர் முன்னிலையில் பேசிய பாஜக துணைத் தலைவர் விஜய் கோயல் ''2014 ஆம் ஆண்டு அத்வானி தலைமையில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்'' என்று தெரிவித்தார்.  பாஜகவின் மூத்த தலைவரும் நடிகருமான சத்ருகன் சின்ஹாவும் அத்வானி தான் பிரதமர் வேட்பாளர் என்று கருத்து தெரிவித்து இருந்தார். 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக பொதுச் செயலாளர் பிரதாப் ரூடி ''பிரதமர் வேட்பாளர் தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களிடையே கருத்து வேற்றுமை இல்லை. பாஜகவின் பிரதமர் வேட்பாளரை பாஜக பாராளுமன்றக் குழு முடிவு செய்யும்'' என்று தெரிவித்துள்ளார்.
     ஆக பா.ஜ.கவிலுள்ள பல தலைவர்கள் மோடியை விரும்பவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. 
பா.ஜ.க.பற்றி சமீபத்தில் அத்வானி செய்திருந்த விமர்சனம் இங்கு கவனிக்கத்தக்கது. 
 பாஜ.க.வில் மிரட்டியே பல பதவிகளை பெற்று வருகிறார் மோடி. ஆனால் அதையெல்லாம் மீறிய மோடியின் மீடியா பிரச்சாரம் மூலம் பல மீடியாக்கள் நன்றாகவே சம்பாதிக்கிறது. மக்கள் மன்றத்திலும் ஒருவித மாய பிம்பங்கள் உருவாக்கப்படுகிறது. அதற்கு உதாரணம் இங்குள்ள சில பார்ப்பனர்களும் மோடி ஆதரவு பாஸிஸ்ட்டுகளும் தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை காட்டி குஜராத்தில் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ளதாக பேசிவருவது கவனிக்கதக்கது. ஆனால் குஜராத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் தண்ணீர் இணைப்போ, மின் இணைப்போ இல்லாமல் இருப்பது பற்றி இங்குள்ள மீடியாக்கள் கூட வாய் திறப்பதில்லை. சமீபத்தில் கூட அமெரிக்காவிலிருந்து "நாங்களும் தொழில் அதிபர்கள் தான்" என்ற அடைமொழியோடு காசு கொடுத்து தன்னைபற்றி புகழ்வதற்காக கூட்டி வந்த கூலிக்கு மாரடிக்கும் கதைகள் கூட இதே மீடியாக்களில்  வெளிவந்தது.
பொருத்திருந்து பார்போம் மோடிக்கு (சங்பரிவாரங்களுக்கு) பா.ஜ.க பணிகிறதா? இல்லையா என்று? 

குஜராத்தில் தண்ணீருக்காக பரிதவிக்கும் கிராம மக்கள்

No comments:

Post a Comment